வெளிநாடுகளில் தங்கிய சிங்கப்பூர் PR… தகுதியை இழந்த விவரம்

Singapore PR needs 2023

சிங்கப்பூர் நிரந்தவாசிகள் மறுநுழைவு அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் தங்கியதால் அவர்களின் நிரந்தரவாச தகுதியை (PR) இழந்துள்ளனர்.

அதாவது சிங்கப்பூரை விட்டு செல்வது அல்லது மறுநுழைவு அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் தங்கிய 2 சதவீதத்துக்கும் குறைவானோர் வருடம்தோறும் தங்கள் PR தகுதியை இழந்துள்ளனர்.

லாரி, கனரக வாகனம் மோதி விபத்து: கடும் சேதமடைந்த லாரி – ஒருவர் மருத்துவமனையில்

தற்போது, PR-கள் வெளிநாடுகளுக்கு செல்லும் முன்னர் செல்லுபடியாகும் மறுநுழைவு அனுமதியை பெற வேண்டும் என்பது நடைமுறை.

அதேபோல தற்போதைய சட்டத்தின்படி; காலாவதியான மறுநுழைவு அனுமதியுடன் PR ஒருவர் வெளிநாட்டில் தங்கி இருந்தால் அவர் PR அந்தஸ்தை தானாகவே இழந்துவிடுவார்.

இனி முன்மொழியப்பட்ட மாற்றங்கள் கூறுவது என்னவென்றால்…

மறுநுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க PRகளுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

அந்த காலகட்டத்தில் PR அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

குறிப்பாக PR அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுவிட்டால், அவர்களால் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கப்பலில் இருந்து விழுந்த இந்திய பெண் உயிரிழப்பு – CCTV காட்சிகளை வைத்து உறுதி