குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்ட சிங்கப்பூர் அதிபர்!

Photo: Singapore Minster Vivian Balakrishnan Official Facebook Page

சீன அதிபர் ஜி ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரில் 24- வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் (Olympic Winter Games) தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், கடந்த பிப்ரவரி 3- ஆம் தேதி அன்று மாலை சீன நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு (Beijing) சென்றிருந்தார். அங்கு அவருக்கு சீன அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வன விலங்குகளுக்கு தனிப்பாலம் அமைத்தும் தொடரும் விபத்துகள்..!

சிங்கப்பூர் அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (Minister Of Foreign Affairs), கலாசாரம், சமூகம், இளைஞர் மற்றும் வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் லோ யென் லிங் (Minister of State Culture, Community and Youth, Trade and Industry Low Yen Ling), அதிபரின் அலுவலகத்தின் உயரதிகாரிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகள், கலாசாரம், சமூகம் மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆகியோரும் பெய்ஜிங் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (04/02/2022) மாலை பெய்ஜிங்கில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவில் சிங்கப்பூர் அதிபர் கலந்துக் கொண்டார். சிங்கப்பூர் அமைச்சர்களும் விழாவில் கலந்துக் கொண்டனர்.

தவறுதலாக போடப்பட்ட 4வது டோஸ் தடுப்பூசி…பெண்ணின் மரணம் குறித்து தீவீர விசாரணை மேற்கொள்ளும் MOH

பெய்ஜிங்கில் உள்ள ‘Bird’s Nest’ மைதானத்தில் நேற்று (04/02/2022) மாலை 05.30 PM மணிக்கு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். விழாவில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டனர்.

பிப்ரவரி 6- ஆம் தேதி வரை சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன், சீன அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கும் வரவேற்பு விருந்திலும் சிங்கப்பூர் அதிபர் கலந்துக் கொள்கிறார்.