சீன அதிபருடன் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் சந்திப்பு!

Photo: Minister Vivian Balakrishnan Official Facebook Page

நான்கு நாள் அரசுமுறை பயணமாக சீனாவிற்கு சென்றுள்ள சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் (Singapore President Halimah Yacob), பெய்ஜிங்கில் இன்று (06/02/2022) மாலை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை (President of the People’s Republic of China Xi Jinping) நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அதிபர் மற்றும் சீன அதிபர் தலைமையில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்துக் கொண்ட உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

அட்டையில் ஒரு எடை, உண்மையில் வேறு எடை… NTUC FairPrice பொருளின் அதிக விலையை தோலுரித்து காட்டிய பெண்!

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், பிப்ரவரி 6- ஆம் தேதி அன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து, 24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை பெய்ஜிங்கில் சீனா வெற்றிகரமாக நடத்தியதற்கு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வாழ்த்தினார். இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் சிறந்த நிலையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

சிங்கப்பூர்-சீனா இராஜதந்திர உறவுகளின் 30- வது ஆண்டு நிறைவையொட்டி, சீனாவில் உள்ள சிங்கப்பூர் சமூகத்தால் தொடங்கப்பட்ட தொண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, சோங்கிங்கில் (Chongqing) உள்ள பெங்ஷூய் கவுண்டியில் (Pengshui County) கட்டப்பட்ட மாணவர் விடுதியின் ‘Zhixinlou’ பெயரை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வெளியிட்டனர். இந்த விடுதியானது, நமது மக்களுக்கு இடையேயான வலுவான நட்புறவையும், இரு நாடுகளும் கல்வியில் இணைக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும், அடையாளப்படுத்துவதாக சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் குறிப்பிட்டார். சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் மற்றும் PRC தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் (PRC National Forestry and Grassland Administration) ஆகியவற்றுக்கு இடையே ‘ஜெயண்ட் பாண்டா (Giant Panda Conservation) பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு’ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

வெளிநாட்டு பணிப்பெண் குளிக்கும் போது ரகசிய கேமரா பொருத்தி படமெடுத்த ஆடவருக்கு சிறை!

இரு தரப்பு உறவுகளைத் தொடர்ந்து மேம்படுத்த இரு நாடுகளும் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர். சிங்கப்பூரும், சீனாவும் ஏற்கனவே உள்ள ஒத்துழைப்பின் பகுதிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் உறுதிப்படுத்தினர். இதில் சுஜோ (Suzhou), தியான்ஜின் (Tianjin) மற்றும் சோங்கிங் (Chongqing) ஆகிய இடங்களில் எங்களது மூன்று அரசாங்க திட்டங்களும் (Government-to-Government projects) அடங்கும். அவை சிறப்பாக முன்னேறி வருகின்றன. மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விவாதித்தனர்.

மேலும் நிபந்தனைகள் அனுமதிக்கப்படும் போது விமான இணைப்பு மற்றும் மக்களிடையே பரிமாற்றத்தை முழுமையாக மீண்டும் தொடங்குவதை எதிர்பார்த்தனர். டிஜிட்டல் பொருளாதாரம் (Digital Economy), பசுமைப் பொருளாதாரம் (Green Economy) மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் (Smart Cities) போன்ற புதிய துறைகளில் அதிக ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர். சிங்கப்பூர் மக்கள் சார்பில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்களுக்கு சீன புத்தாண்டு வாழ்த்துகளைத் (Lunar New Year) தெரிவித்தார்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.