மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியாவுக்கு செல்கிறார் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்!

Photo: President Of Singapore Official Facebook Page

மலேசியா நாட்டு மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்தூடின் அல்- முஸ்தபா பில்லா ஷா (Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah ibni Almarhum Sultan Haji Ahmad Shah Al-Musta) விடுத்த அழைப்பை ஏற்று சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் வரும் மார்ச் 20- ஆம் தேதி அன்று மலேசியாவுக்கு செல்கிறார்.

“Class 3” ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய நபர் – மடக்கி பிடித்தது போலீஸ்

அங்குள்ள இஸ்தானா நெகாராவில் (Istana Negara) சிங்கப்பூர் அதிபருக்கு அரச குடும்ப மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, அதிபர் ஹலிமா யாக்கோப்-க்கு மலேசியா மன்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் விருந்து வைத்து உபசரிக்கின்றனர். பின்னர், இஸ்தானாவில் உள்ள முற்றத்தில் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், கெலாம் (Gelam) செடி ஒன்றையையும் நடவிருக்கின்றார்.

சிங்கப்பூர் அதிபரின் மலேசிய வருகையை கௌரவிக்கும் வகையில், புதிய வகை ஆர்க்கிட் மலருக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் அவரது கணவரின் பெயரை இணைத்து ‘Vanda Halimah Yacob Mohamed’ எனப் பெயர் சூட்டப்படும்.

வரும் மார்ச் 22- ஆம் தேதி வரை மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம்மைச் சந்தித்துப் பேசவிருக்கிறார். அதைத் தொடர்ந்து, தொழில்முனைவோர்கள், மலேசியா வாழ் சிங்கப்பூரர்களைச் சந்திக்கவுள்ளார். இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வெளியானது ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம்!

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், நாட்டில் இல்லாதபோது, அதிபர் ஆலோசனை மன்றத்தின் தலைவரான எடி தியோ (Mr Eddie Teo, Chairman of the Council of Presidential Advisers) அதிபர் அலுவலகத்தின் பொறுப்புகளைக் கவனித்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அதிபருடன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மலேசியாவுக்கு செல்லவிருக்கின்றனர்.