சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக பிரபல தொழிலதிபர் அறிவிப்பு!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக பிரபல தொழிலதிபர் அறிவிப்பு!
Photo: georgegohchingwah.com

 

 

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அதற்கு முன்பே தேர்தலை நடத்தி சிங்கப்பூர் அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நிலையில், 68 வயதாகும் அதிபர் ஹலிமா யாக்கோப் தான் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கடந்த மே மாதம் 29- ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்திருந்தார்.

தங்க கைச்செயினை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த நபர் – அடகு கடையில் கைவரிசை: CCTV காட்சிகளை வைத்து தூக்கிய போலீஸ்

இந்நிலையில், சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம, தான் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவதால், சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்தும், அரசியல் கட்சியின் பதவியில் இருந்தும், அனைத்து அரசு சார்ந்தப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- க்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர், தர்மன் சண்முகரத்தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

சிங்கப்பூர் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் அமைச்சர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஹார்வே நார்மன் ஓசியா (Harvey Norman Ossia) நிறுவனத்தின் நிறுவனரும், ஓசியா இன்டர்நேஷனல் முதலீட்டு (Ossia International Ltd) நிறுவனத்தின் தலைவரும், பார்டர் மிஷன் நிறுவனத்தின் (Border Mission) துணை நிறுவனருமான 63 வயதான ஜார்ஜ் கோ, வருகிற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கடையில் இருந்து திடீரென விழுந்த கண்ணாடி… உடைந்து சிதறியதில் காயமுற்ற ஊழியர்கள்

இது தொடர்பாக, அவரது சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “16 வயதிலேயே வேலைக்கு சென்றவர். ஆரம்பக் காலம் முதல் தற்போது வரை எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாதவர். தனது நிறுவனங்களின் வர்த்தகத்தை 14 நாடுகளுக்கு விரிவுப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் மொரோக்கோ நாட்டிற்கான சிங்கப்பூர் தூதரக ஜார்ஜ் கோ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தகுதிச் சான்றிதலுக்கான விண்ணப்பங்களை ஜூன் 13- ஆம் தேதி முதல் சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.