அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சிங்கப்பூர் பிரதமர் – அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் சந்திப்பு.!

singapore prime minister meets up with joe biden white house and kamala harris

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதற்காக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். West wing Portico -வை வந்தடைந்த சிங்கப்பூர் பிரதமரை அமெரிக்க நெறிமுறை தலைவர் Rufus Gifford வரவேற்றார். Oval அலுவலகத்தில் பிரதமர் லீ அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்துப் பேசுவார்.

சிங்கப்பூரின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் Josephine Teo,வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் Gan Kim Yong,வெளியுறவு துறை அமைச்சர் Vivian Bala Krishnan ஆகியோர் அடங்கிய தூதுக்குழு பிரதமர் லீயுடன் பயணித்தது.திரு பைடன் உடனான சந்திப்பிற்கு பிறகு ,வெள்ளை மாளிகையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேச உள்ளார்.

அமெரிக்காவில் மாண்புமிகு திரு. பைடன் ஆட்சியின் கீழ் முதல்முறையாக பிரதமர் லீ பைடனை சந்திக்க இருக்கிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரோமில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின்போது இரண்டு தலைவர்களும் இறுதியாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை பிரதமர் லீயின் அமெரிக்க சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையேயான சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே வலுவான பன்முக உறவுகளை உருவாக்கும் என்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் லீ வாரயிறுதியில் ஐநாவின் பொது செயலாளர் Antonio Guterres மற்றும் தொழில்துறை மற்றும் நிதித்துறை தலைவர்களை சந்திப்பார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.