உக்ரேன் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்! – வாரி வழங்கப்படும் உதவிகள் !

ukraine russia india war singapore

ரஷ்யாவின் கடுமையானத் தாக்குதலுக்கு ஆளான உக்ரைனுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஆதரவளித்து வருகிறது.உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு உதவிகளை வழங்குகிறது.

மருத்துவ உபகரணங்கள்,குடிநீர் மற்றும் மின்னுற்பத்திச் சாதனங்கள் போன்றவற்றை வழங்குகிறது.செஞ்சிலுவைச் சங்கம் வழங்கும் சாதனங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 750 பேருக்கு மின்சாரம் வழங்க முடியும்.

ரஷ்யாவின் கடுமையான தாக்குதலில் குடியிருப்புகளை இழந்து தவிக்கும் உக்ரேனியர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூரில் வடிவமைக்கப்பட்ட பத்து நவீன வீடுகளைச் சங்கம் கட்டிக்கொடுக்கிறது.

இந்த நவீன வீடுகள் கடும்குளிரையும்,அதிர்வுகளையும் தாங்கும் அளவிற்கு உறுதியான கட்டுமானமாக இருக்கும்.மக்களுக்கு இதமான வெப்பத்தை வழங்கும் நிலையங்களிலும் அந்தச் சாதனங்கள் உபயோகிக்கப்படும்.

மேலும்,பல்வேறு பயன்பாடுகளுக்கு சாதனங்கள் பயன்படுத்தப்படும்.தொலைத்தொடர்புக் கருவிகளுக்கும், மருத்துவச் சாதனங்களுக்கும் மின்னூட்டம் செய்ய பெருமளவில் அவை கைகொடுக்கும்.