ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட பயணத் தடை பட்டியலிலிருந்து சிங்கப்பூர் நீக்கம்!

PHOTO: Reuters

கோவிட்-19 கிருமித் தொற்றுக்கு பிறகு, பல்வேறு நாடுகளிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியம் பயணத் தடையை விதித்திருந்தது.

குறிப்பிட்ட நாடுகளில் உள்ள கோவிட்-19 கிருமித் தொற்றுப் பரவலின் அடிப்படையில் கணக்கீடு செய்து சமீபகாலமாக ஐரோப்பிய ஒன்றியம் ஒருசில நாடுகளுக்கு பயணத்தடையை நீக்கி வருகிறது.

சிங்கப்பூரில் கொரோனாவால் மேலும் 17 பேர் உயிரிழப்பு!

இச்செயல்முறையை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பிய நாடுகளைக் கொண்டு ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பயணத்தடை நீக்க பட்டியலை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தி, மறுபரிசீலினை செய்து வருகிறது.

சென்ற மாதம் கடைசியில் மறுஆய்வு செய்யப்பட்டபோது பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெற்றிருந்தது.

ஆனால் சிங்கப்பூர், உக்ரைன் மற்றும் இன்னும் சில நாடுகளை பயணத் தடை நீக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய மன்றம் நீக்கிவிட்டது.

இதனால் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பிய நாடுகள், சிங்கப்பூர் நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எண்ணப்படுகிறது.

இந்தாண்டு இறுதியில் ஐரோப்பாவுக்குப் பயணம் செய்யவிருந்த பல சிங்கப்பூரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரை பயணத்தடை நீக்கும் பட்டியிலில் இடம்பெற வைக்க பல பரிந்துரைகளை செய்தபோதும், அதனை செயல்படுத்துவது ஒன்றிய உறுப்பிய நாடுகளுடைய அரசுகளின் பொறுப்பு என்பது நிதர்சன உண்மையாகும்.

இதுபோன்ற சில புதுமையான பரிந்துரைகளால் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25ற்கும் மேற்பட்ட உறுப்பிய நாடுகள், சிங்கப்பூர் நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

குறிப்பிடப்பட்ட நாடுகளில் உள்ள கோவிட்-19 கிருமித்தொற்று நிலவரம், கிருமித் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அந்நாடு செயல்படுத்தும் செயல்முறைகள், விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் மருத்துவ வசதிமுறை ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியம் முதலில் கருத்தில் கொள்ளும்.

அதன் பிறகே பயணத்தடை நீக்க பட்டியலில் இடம்பெறும் நாடுகள் பற்றி தீர்வு செய்யப்படும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

தீபாவளி திருநாளில் நடைபெற்ற நெகிழ்வான சம்பவம்!