சிங்கப்பூரில் எளிதாக்கப்பட்ட covid-19 விதிமுறைகள் – இரவு நேர விடுதிகள் மற்றும் Discotheque முழுமையாக இயங்குவதற்கு அனுமதி

singapore reopening niht life restaurants discotheques with restrictions mask and social distance mandate

Covid-19 வழக்குகள் குறைய தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரில் பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் துறைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இரவுநேர வணிகங்கள், (Discotheques) டிஸ்கோத்தெக் மற்றும் இரவு விடுதிகள் மீண்டும் முழுமையாக திறப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

இரவுநேர வணிகங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் சில்லரை மதுபான விற்பனை நிறுவனங்கள் அனைத்தும் விதிக்கப்பட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இரவு நேர விடுதிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்குள் செல்வதற்கு முன்பு விரைவான ஆன்டிஜன் சோதனையை வழங்க வேண்டும்.

இரவு நேர விடுதிகள் மற்றும் Discotheque போன்றவற்றிற்கு செல்பவர்கள் ,இரவுநேர வளாகத்திற்கு செல்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக Covid-19 பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று MTI மற்றும் MHA தெரிவித்தது.Covid-19 நடவடிக்கையை தளர்த்துவதற்கு ஏற்ப உள்ளது என்று இரண்டு அமைச்சகங்களும் திங்கள்கிழமை ஒரு கூட்டு ஊடக வெளியீட்டில் தெரிவித்தது.

ஆயிரத்துக்கும் குறைவான நபர்களை கொண்ட நிகழ்வுகளுக்கு சுகாதார கட்டுபாடுகள் அவசியமில்லை.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட பெரிய கூட்டங்கள் மற்றும் வளாகங்களுக்கு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் Covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெற்றிருத்தல் வேண்டும்

Covid-19 பரிசோதனை முடிவுகள், சோதனை முடிவுகளை பெற்றதிலிருந்து 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.