சிங்கப்பூரில் மூன்று மாதங்களில் இல்லாத அளவு ஏற்பட்ட கொரோனா உயிரிழப்பு!

Google Maps

சிங்கப்பூரில் மார்ச். 04 நிலவரப்படி, கொரோனா கிருமித்தொற்று காரணமாக மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தொற்று தொடங்கியதிலிருந்து உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,067ஆக உள்ளது.

சிங்கப்பூரில் Employment Pass அனுமதிக்கு புதிய புள்ளிகள் முறை – வாங்க அதுபற்றி பார்ப்போம்!

கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி 18 இறப்புகள் பதிவாகியதில் இருந்து தற்போது ஒரே நாளில் பதிவான அதிகபட்ச COVID-19 இறப்புகளின் எண்ணிக்கை இதுவாகும்.

மருத்துவமனைகளில் உள்ளோர் விவரம்:

மருத்துவமனையில் உள்ள நோயாளிகள்: 1,678

ஆக்ஸிஜன் தேவை: 211

ICU அவசர சிகிச்சை பிரிவில்: 45

தடுப்பூசி நிலவரம்

சிங்கப்பூரில் தகுதியுடைய 95 சதவீத பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

அதே போல், 68 சதவீத பேர் (மொத்த மக்கள் தொகையில்) பூஸ்டர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – புதிய விண்ணப்பம், புதுப்பித்தலுக்கு பொருந்தும்