கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனிதவளத் தேவை – அதிகரித்த வேலைவாய்ப்பு

singaporeans-happiness survey
Photo: gov.sg

சிங்கப்பூரில் வசிப்பவர்களின் வேலைவாய்ப்பு விகிதம் தொற்றுநோய்க்கு முந்தைய சூழலுடன் ஒப்பிடுகையில் உயர்ந்துள்ளது.

மேலும், வேலையின்மை விகிதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பதாகவும் மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு டிச. 1 முதல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள்!

2021ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஊழியரணி அறிக்கையை சிங்கப்பூர் இன்று புதன்கிழமை (டிசம்பர் 1) தெரிவித்துள்ளது.

“SGUnited Jobs and Skills Packageன் கீழ் உள்ள முத்தரப்பு ஆதரவால் அந்த வேலை வாய்ப்பு விகிதம், கோவிட்-க்கு முந்தைய சூழலை விட உயர்ந்தது,” என்று MOM கூறியது.

கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தற்காலிக மனிதவள தேவை அதிகம் ஏற்பட்டது. இதனால் அதிக வேலைவாய்ப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நிரந்தர வேலைகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது என்றும் மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

வேலையின்மை மற்றும் நேரம் தொடர்பான வேலையின்மை விகிதங்கள் மேம்பட்டுள்ளன என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் “கிருமி தொற்று ஆபத்து அதிகம்” உள்ள பட்டியலில் இடம் பிடித்த “சிங்கப்பூர்”