இந்திய ஊழியர்களை ஈர்த்த “சிங்கப்பூர் வேலை விளம்பரம்” – வேலைக்கு வழங்கப்பட்ட சிறப்புகளை கண்டு வாயடைத்து போன ஊழியர்கள்

Singapore Restaurant Job Call poster viral
Singapore Ajumma Restaurant

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும் சம்பளத்தை ஒப்பிடும்போது இந்தியாவில் சம்பளம் குறைவாக தான் உள்ளது.

இந்திய நாட்டில் எவ்வளவு தான் நாம் உழைத்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாதிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு ஊழியரின் அரிய வெற்றி.. முதலாளிக்கு எதிராக வழக்கு – நஷ்டஈடு பெற்று சாதனை

சமீபத்தில், சிங்கப்பூர் உணவகம் ஒன்றின் வேலைவாய்ப்பு விளம்பரம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது பல இந்திய ஊழியர்களை ஈர்த்து வருகிறது.

ஏனெனில், அந்த உணவகத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்புகள் மற்றும் சம்பளம் தொடர்பான பட்டியல்கள் இந்திய ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அதன் காரணமாக, இந்த ஆட்சேர்ப்பு விளம்பரம் இந்தியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

சிங்கப்பூரில் அமைந்துள்ள கொரிய உணவகமான அஜும்மா உணவகம் இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

பகுதி நேர ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு $10–$15 ஊதியம் (இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்திற்கு ₹600 முதல் ₹900 வரை) வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர் நலன்களில் மருத்துவச் சலுகைகள், கூடுதல் உணவு அலவன்ஸ், படிப்பு விடுப்பு, ஆண்டுக்கு இருமுறை போனஸ், ஊழியர்களின் படிப்புக்கான ஸ்பான்சர்ஷிப் மற்றும் பல வழங்கப்படும் என சொல்லப்பட்டது தான் அதன் சிறப்பு.

மேலும், மருத்துவப் பயன்களில் பரிசோதனை மானியங்கள் மற்றும் ஆண்டுதோறும் பற்களை சோதித்து கொள்வது ஆகியவையும் அதில் அடங்கும்.

இவை அனைத்தும் இந்திய ஊழியர்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளும் நிறுவனம் தான் உண்மையில் சிறந்த நிறுவனம் என்றும் பல ஊழியர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி