ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க மளிகை பொருட்களை விநியோகிக்கும் ரோபோர்ட்!

Singapore Robot delivery
(PHOTO: OTSAW)

சிங்கப்பூரில் சுமார் 700 வீடுகளுக்கு மளிகை பொருட்களை விநியோகம் செய்ய ரோபோர்ட் மனிதர்கள் தயராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வருட சோதனைமுறையாக பொங்கோல் பகுதியில் வீடுகளுக்கு மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் Work permit அனுமதியில் வந்த நான்கு பேருக்கு கிருமித்தொற்று!

மனிதவள பற்றாக்குறையை சமாளிக்க இந்த சோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நேற்று தொடங்கியது, இதன் அறிமுக விழாவில் தொடர்பு மற்றும் தகவல் துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கலந்துகொண்டார்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகரச் சீரமைப்பு ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), NTUC FairPrice, CM லாஜிஸ்டிக்ஸ், OTSAW, தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து இந்த சோதனைமுறையில் பணியாற்றுகின்றன.

இந்த ரோபோர்ட் இயந்திரம் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

ஷாப்பிங் மால் கடையில் தீ – வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்!