சிங்கப்பூரில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 280 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனம் தகவல்!

Photo: Google Maps

உலகின் ஆட்டோ மொபைல் துறையில் முன்னணி உள்ள நிறுவனம் ரோல்ஸ்- ராய்ஸ் (Rolls-Royce). இந்த நிறுவனத்தின் கார்கள் உலக புகழ்பெற்றது. உலகின் பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள், திரைத்துறையில் முன்னணி நடிகர், நடிகைகள் மட்டும் இந்த நிறுவனத்தின் கார்களைப் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான காரணம் ரோல்ஸ்- ராய்ஸ் காரின் விலை கோடிக்கணக்கான ரூபாய் ஆகும். கார் உற்பத்தியில் மட்டுமின்றி விமான இயந்திரங்கள் தயாரிப்பு உள்ளிட்டப் பல்வேறு நிறுவனங்களையும் வெற்றிகரமாக இயக்கி வருகிறது ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமையகம் லண்டனில் அமைந்துள்ளது.

சவுதி இளவரசரைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர்!

ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனம், சிங்கப்பூரில் தனது ஜெட் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலை விமான பாகங்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவையை சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்கள் கொடுக்கும் ஆர்டர்களின் அடிப்படையில் தயாரித்து அனுப்பி வருகிறது. சுமார் 1,000- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 280 பேரை வேலைக்கு எடுக்க உள்ளதாக ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 150 பேர் இந்தாண்டு பணியமர்த்தப்படுவர். மற்ற 130 பேருக்கு தொழிற்சாலையில் பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, பயிற்சி காலம் முடிந்து, திறன் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களாகும் போது முறைப்படி, அவர்களும் பணியமர்த்தப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டில் உயிரிழந்த தமிழக ஊழியர்… கடைசி வரை இருந்து இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமியர்கள்!

வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அதிகளவில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால், உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தொழிலாலாளர்களை அதிகளவில் பணியமர்த்த ரோல்ஸ்- ராய்ஸ் முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் ஏரோ என்ஜின் சர்வீசஸ் (Singapore Aero Engine Services Private Limited- ‘SAESL’) சாங்கியில் உள்ள SIA இன்ஜினியரிங் நிறுவனத்துடன் அதன் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு கூட்டு முயற்சியில் பணியமர்த்தப்படுபவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.

மீண்டும் FairPrice விலை லேபிளில் குளறுபடி: விலை லேபிளில் 296கி.. உண்மை எடை 176கி – வைரலான வீடியோ

ரோல்ஸ்- ராய்ஸ் நிறுவனம், கடந்த 2020- ஆம் ஆண்டு ஏறக்குறைய 240 தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்திருக்கிறது. இதில் 24% தொழிலாளர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.