தமிழ்நாட்டுக்கே வருது சிங்கப்பூர் – பல ஆயிரம் பேருக்கு வேலை : மாஸ் காட்டிய தமிழக அரசு! #IGSS Ventures

IGSS Ventures
A Memorandum of Understanding (MoU) between IGSS Ventures and Guidance Tamil Nadu for setting up the massive factory was signed on Friday. Credit: DH Photo

சிங்கப்பூரைத் தலைமையிடமாக கொண்டு தொழில்நுட்ப நிறுவனம் தமிழ்நாட்டில் 25,600 கோடி ரூபாய் (சுமார் S$4.51 பில்லியன்) மதிப்பில் செமி கண்டக்டர் பூங்காவை அமைக்க தமிழக அரசாங்கத்துடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனமான IGSS வென்சர்ச்சர்ஸ் (IGSS Ventures) பிரைவேட் லிமிடெட்டுக்கும், தமிழக அரசுக்கும் இடையே செமிகண்டக்டர் உயர் தொழில் நுட்ப பூங்க அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

தமிழ் நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில்நுட்ப பூங்காவை அமைப்பதற்காக, தமிழ் நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடேட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த உற்பத்தி நிறுவனம் நேரடியாக 1,500 பேரை வேலையில் சேர்க்கும். ஆனால் அந்த பூங்காவின் மூலம் மேலும் சுமார் 25,000 வேலைகள் உருவாக்கப்படும் என்று வழிகாட்டி நிறுவனம் கூறியதாக டெக்கன் ஹெரால்ட் செய்தித்தாள் தெரிவித்தது.