சிங்கப்பூரில் அதிக வருகையாளர்களை கொண்ட பொது இடங்களில் SafeEntry Gateways பதிவு முறை..!

New SafeEntry Gateways
(Photo: Mustshare news)

சிங்கப்பூரில் அதிக வருகையாளர்களை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் SafeEntry Gateways எனும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதாவது மால்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் போன்ற இடங்களில் அதை விரைவில் எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூர் தனது எல்லைகளை மீண்டும் எப்போது திறக்கும்?

வரும் ஏப்ரல் 19 முதல், அந்த இடங்களில் உள்ள தற்போதைய SafeEntry முறை, புதிய SafeEntry Gateway முறையாக மேம்படுத்தப்படும்.

இந்த புதிய அம்சத்தின் மூலம் தொடர்பு இல்லாமல் செயலி அல்லது கருவி வழியாகப் பதிவுசெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை ஸ்மார்ட் நேஷன் மற்றும் டிஜிட்டல் அரசாங்க குழு (SNDGG) இன்று (மார்ச் 16) அறிவித்துள்ளது.

பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள், தேசிய சிறப்பு நிலையங்கள், சமூக மருத்துவமனைகள் மற்றும் பாலிக்ளினிக்குகள் ஆகியவையும் அதனை செயல்படுத்த வேண்டும்.

சிங்கப்பூரில் 3 மில்லியனுக்கும் அதிகமான TraceTogether கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று SNDGG கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்தும் முறை:

EZ-link கார்டை பயன்படுத்துவதை போலவே, TraceTogether கருவி அல்லது கைப்பேசி செயலியை SafeEntry Gateway பெட்டிக்கு அல்லது செயலிக்கு 25cm அருகில் வைக்கவும்.

மேலும், பதிவுமுறை வெற்றிகரமாக இருந்தால், பெட்டியில் பச்சை விளக்கு மற்றும் பீப் ஒலி வெளியாகும், SafeEntry செயலி பச்சை திரையைக் காண்பிக்கும்.

சிங்கப்பூரில் இலவச முகக்கவசங்களை பெற 61 முறை மோசடி முயற்சி – ஆடவர் கைது