“கொளுத்தும் வெயிலுக்கு இவ்ளோ இருந்தா போதும்” – சிங்கப்பூரின் சிகையலங்கார நிலையங்களில் “பாப் கட்டிங் ” செய்யும் பெண்கள்

Singapore weather report june
Pic: Unsplash

சிங்கப்பூரின் அதிக வெப்பநிலை காரணமாக குளிர்பானங்கள் மற்றும் முடிதிருத்தும் சாலைகள் போன்ற வணிகங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. Boat Quay -ல் உள்ள சலூனுக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறுகிய அளவில் முடி வைத்துக் கொள்வதற்கான கோரிக்கைகளை அதிக அளவில் வைப்பதாக சலூன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் வெப்பமான வானிலை சில வணிகங்களுக்கு நல்ல செய்தியாகும்.

வெப்பநிலை உயரும் போது மக்கள் நீச்சல் குளங்கள் மற்றும் ஏர் கண்டிஷனிங் சேவை போன்றவற்றை நோக்கி படையெடுக்கின்றனர். சலூன்களில் மே மாதம் சிறிது ஓய்வு கிடைத்ததாக உரிமையாளர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் தினசரி வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தேசிய சுற்றுச்சூழல் அமைப்பின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சலூன் கடைகளில் 20 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாக சலூன் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடைக்காலத்தில் ஏற்படும் வியர்வை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்றவற்றின் காரணமாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறுகிய அளவில் முடி வைத்துக்கொள்ள விரும்புவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முடி திருத்தம் செய்யும் போது வாடிக்கையாளர்கள் உடனான ஒவ்வொரு உரையாடலும் வானிலையுடன் தொடங்குவதாக தெரிவித்த உரிமையாளர், அவர்களில் பெரும்பாலானோர் முடி திருத்தம் செய்த பின்பு குளிர்ச்சியாக உணர்வதாக கூறியதாக தெரிவித்தார். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சிகை அலங்கார நிலையங்களில் பாப் கட்டிங்கையே விரும்புகின்றனர்