சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி ஆடவர் உட்பட மேலும் இருவருக்கு தூக்கு

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களுக்காக சிங்கப்பூரில் இரண்டு ஆடவர்கள் நாளை ஜூலை 7, 2022 அன்று தூக்கிலிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் மூலம் இந்த வேலையில் ஈடுபட்டால் தண்டனை உறுதி – சிக்கிய 22 பேர்

இந்த தகவலை சிங்கப்பூர் ஆர்வலர்களான, கிர்ஸ்டன் ஹான் மற்றும் கோகிலா அண்ணாமலை ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த தூக்கு தண்டனையை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் (CNB) உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது நேற்று ஜூலை 5 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் இருவரையும் நாளை ஜூலை 7 ஆம் தேதி தூக்கிலிட திட்டமிடப்பட்டுள்ளதாக CNB அறிவித்தது.

Kalwant Singh

அவர்கள் 48 வயதான சிங்கப்பூரர் நோராஷரீ பின் கவுஸ் மற்றும் 32 வயதுமிக்க மலேசியரான கல்வந்த் சிங் a/l ஜோகிந்தர் சிங் ஆகியோர்.

இந்தியாவின் பஞ்சாப் வம்சாவளியை சேர்ந்த மலேசியரான கல்வந்த் சிங், 2016ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு ஹெராயின் போதைப் பொருளைக் கொண்டு வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் நிர்வாணம்… சாலையில் செல்வோரிடம் தொல்லை – மடக்கி பிடித்த போலீஸ் (Video)