Omicron கிருமியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்: “பூஸ்டர்” தடுப்பூசி முக்கிய பகுதியாக இருக்கும் – பிரதமர் லீ

(Photo: MCI)

சிங்கப்பூர் தனது COVID-19 பயணத்தில், ஊக்கமளிக்கும் அறிகுறிகளை காணத் தொடங்கியுள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் திங்கள்கிழமை (டிசம்பர் 13) தெரிவித்தார்.

ஆனால், கிருமித்தொற்றில் இருந்து இன்னும் வெளியேறவில்லை என்றும் பிரதமர் நினைவு படுத்தினார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரியும் பாதுகாப்புக் காவலருக்கு சிறை

“கடந்த மூன்று மாதங்களில் கிருமி பாதிப்பு குறைந்து வருகிறது, சிங்கப்பூரில் சுகாதார கட்டமைப்பை பாதுகாத்துள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

இதனால் இறப்பு எண்ணிக்கையை குறைவாகவே வைத்துக்கொள்ள முடிந்துள்ளது என்றும் திரு லீ கூறினார்.

சிங்கப்பூர் இப்போது Omicron மாறுபாட்டின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

அதனை சமாளிக்க தடுப்பூசியின் “பூஸ்டர்” ஷாட்கள் முக்கிய பகுதியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இனி கட்டாய PCR சோதனை, ஏழு நாள் தனிமை இல்லை: 14 நாள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்