துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மூத்த துணையமைச்சர் சிம் ஆன்!

Photo: Minister Sim Ann official Facebook Page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (09/03/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “வெளியுறவுத்துறை மற்றும் தேசிய வளர்ச்சித்துறையின் மூத்த துணையமைச்சரான சிம் ஆன் (Ministry of Foreign Affairs and Ministry of National Development, Sim Ann) வரும் மார்ச் 10- ஆம் தேதி முதல் மார்ச் 17- ஆம் தேதி வரை துருக்கி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பொது இடத்தில் பெண்ணை தாக்கிய காட்டுப்பன்றி… தேடிவரும் அதிகாரிகள் – அச்சத்தில் மக்கள்!

துருக்கியில் (Turkey) மார்ச் 11- ஆம் தேதி முதல் மார்ச் 13- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2- வது அன்டால்யா இராஜதந்திர மன்றத்தில் (2nd Antalya Diplomacy Forum) ‘AI, metaverse and all else’ என்ற தலைப்பில் மூத்த துணையமைச்சர் சிம் ஆன் உரையாற்ற உள்ளார். பின்னர், இஸ்தான்புல் (Istanbul) மற்றும் தலைநகர் அங்காரா (Ankara) ஆகிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு முக்கிய தலைவர்களைச் சந்திக்கும் மூத்த துணையமைச்சர் சிம் ஆன், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதைத் தொடர்ந்து, மார்ச் 16- ஆம் தேதி முதல் மார்ச் 17- ஆம் தேதி வரை மூத்த துணையமைச்சர் சிம் ஆன் கிரீஸ் (Greece) நாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் தலைநகர் ஏதென்ஸில் (Athens) பல்வேறு தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இனி இதெல்லாம் “கட்டாயம்” – அதிரடி அறிவிப்பு

இந்த சுற்றுப்பயணத்தின் போது மூத்த துணையமைச்சருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் உடனிருப்பர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.