சிங்கப்பூர் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை பங்களிக்கிறதா! – G20 கூட்டமைப்பு நாடுகளின் நடவடிக்கைகள்

singapore shares fund to pandemic g20 summit europe world bank

பெருந்தொற்று தடுப்பு,தயார்நிலை ஏற்பாடு,எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கியின் ஆதரவுடன் நிறுவப்பட்டுள்ள நடுவர் நிதி மையம் ஒன்றுக்கு சுமார் US$10 மில்லியனை சிங்கப்பூர் பங்களிக்கும் என்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதாவது S$ 13.9 மில்லியன் நிதியை வழங்கும் என்று நிதி அமைச்சகமும் சுகாதார அமைச்சகமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

இந்த நிதி மையத்தை அமைப்பதற்கான முன்மொழிதலுக்கு ஜி20 நிதி, சுகாதார அமைச்சர்களின் சந்திப்பு ஒப்புதல் அளித்தது.மேலும் ஜி20 உயர்மட்ட சுயேச்சை குழுவின் பரிந்துரைகளுக்கும் இந்த முன்மொழிவு ஒத்து இருக்கிறது.
சென்ற ஆண்டு இத்தாலிய ஜி20 தலைமைத்துவத்தால், தொற்று நடவடிக்கைகளுக்காக நிதியளிக்கும் இந்த குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பெருந்தொற்று தடுப்பு தயார்நிலை ,பதில் நடவடிக்கைக்கு நிதி அளிப்பதில் ஏற்படும் குறைபாட்டைப் போக்கவும்,அவை தொடர்பான முதலீடுகளை ஊக்குவிக்கவும் இந்த நடுவர் நிதியமைப்பு இலக்கு கொண்டுள்ளது.இந்த நிதியமைப்பை நிர்வகிக்க செயல்பாட்டு,சட்டபூர்வ,நிதிச்சேவைகளை உலக வங்கி வழங்குகிறது.

இந்த நிதியமைப்பு குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்டிருக்கும் நாடுகளில் உள்ள உள்நாட்டு முதலீடுகளை விரைவுபடுத்த ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு இந்த அமைப்பு துணை நிற்கும்.வட்டார அளவிலும் உலகளவிலும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஆற்றலை மேம்படுத்தவும் இது உதவும்.ஐரோப்பிய ஆணையம்,இந்தோனேசியா,ஜெர்மனி,அமெரிக்கா ஆகியவை இந்த நிதியமைப்பிற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளன.

இந்தோனேசியாவின் ஜி20 தலைமைத்துவத்துடனும் அனைத்துலக பங்காளிகளுடனும் சிங்கப்பூர் தொடர்ந்து இணக்கமாகப் பணியாற்றும் என்று நிதி,சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளன.ஜி20 கூட்டமைப்பில் ஐரோப்பிய ஒன்றியமும் 19 நாடுகளும் இடம்பெற்றுள்ளன.இந்தோனேசியாவின் பாலித்தீவில் இந்தாண்டு நவம்பர் மாதம் ஜி20 அமைப்பு அதன் உச்சி மாநாட்டை நடத்தும்.