வடகொரியாவுக்கு உதவி செய்த சிங்கப்பூரர்! – வலைவீசித் தேடும் அமெரிக்கா;தகவல் கூறினால் குவியும் டாலர்கள்!

Photo: Mothership

மூன்றாம் உலகப்போர் தொடங்குவது போல உலகின் வல்லரசு நாடுகளுக்கிடையே பரபரப்பான சூழல் நிலவுகிறது.ரஷ்யா உக்ரைன் மீது நடத்தும் கடும் தாக்குதல் ஒருபுறம் இருக்க,அமெரிக்கா போன்ற வல்லரசு நாடு வர்த்தக ரீதியாக சில நாடுகளின் மீது போர் தொடுக்கிறது.

வடகொரியாவுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்ய சிங்கப்பூரர் ஒருவர் உதவியதாக சந்தேகிக்கப்படுகிறது.அந்த நபரை அமெரிக்க அரசாங்கம் தீவிரமாக தேடி வருகிறது.இந்நிலையில் அந்நபர் குறித்த தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் வரை வெகுமதி அளிக்க்கப்படும் என்று பைடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள Swanseas Port Services என்ற கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் குவெக் கீ செங்தான் அமெரிக்கா தேடிவரும் நபர்.கடந்த ஆண்டு அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்களை ஆதரிக்கும் செயல் என்று கூறப்படுகிறது.

வடகொரியாவுக்கு எரிபொருள் விநியோகம் செய்த கப்பல் அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்டது.அந்தக் கப்பலில் இருந்து வடகொரியக் கொடி ஏந்திய கப்பலுக்கு சுமார் 1.5 மில்லியன் டாலர் மதிப்பிலான எரிபொருள் மாற்றப்பட்டது செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது சிங்கப்பூரர் குவெக் தலைமறைவாகியுள்ளார்.அவரை சிறைபிடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.