சிங்கப்பூர் உடற்பயிற்சி நிலையங்களில் நிரம்பி வழியும் கூட்டம் – மீண்டும் யோகா,நீச்சல்குளம் என செல்லும் சிங்கப்பூரர்கள்

Free entry to public swimming pools and gyms
Free entry to public swimming pools and gyms for Singaporeans aged 65 and above (Photo: ActiveSG)

சிங்கப்பூரில் Covid-19 கிருமிப் பரவல் 2020-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இரண்டு ஆண்டுகளாக பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டன.கிருமிப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவற்றில் உடற்பயிற்சி கூடங்களும் உள்ளடங்கும்.இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கின்றன.

இது குறித்து பதிலளித்த ‘ஸ்போர்ட் சிங்கப்பூர் இயக்கம்’ தனது 26 உடற்பயிற்சி கூடங்களை கடந்த மே மாதம் மட்டும் 2,38,600-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளது.இது தொற்று பரவத் தொடங்கியதற்கு முன்பு 2019-ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம் என்றும் அது குறிப்பிட்டது.

மேலும்,இந்தாண்டு மே மாதம் யோகா போன்றவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்திருக்கிறார்கள்.இது 2019-ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும் போது 16% அதிகமாகும்.’ஸ்போர்ட் சிங்கப்பூர் இயக்கம்’ 19 விளையாட்டு நிலையங்களை நடத்துகிறது.

தனது நீச்சல் குளங்களுக்கும்,கூடைப் பந்து போன்றவற்றிற்கான முன்பதிவுகளும் அவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக இந்த இயக்கம் தெரிவித்தது.

பெருந்தொற்றின் போது உடற்பயிற்சிக் கூடங்களின் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு பல வழிகளிலும் ஸ்போர்ட் எஸ்ஜி இயக்கம் உதவியது.படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் கூட உடற்பயிற்சிக் கூடங்களில் இன்னமும் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.