ஸ்ரீ சிவன் கோயிலில் இன்று பிரதோஷ பூஜை!

Photo: Google Maps

சிங்கப்பூரில் உள்ள கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2-ல் (Geylang East Avenue 2) அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இக்கோயிலில் இன்று (14/04/2022) பிரதோஷ பூஜை நடைபெறவுள்ளது.

சொந்த நாட்டை விட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் – “சிங்கப்பூரில் வேலை” ஏன் இவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது?

இன்று (14/04/2022) மாலை 04.20 மணி முதல் மாலை 05.45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/TermArchanai/BookTermarchanai என்ற இணையதளப் பக்கத்தில் பதிவுச் செய்யலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப்பொருட்களும் மற்றும் வில்வ அர்ச்சனையைச் செலுத்தி விடுவார்கள்.

ஷாங்காயில் உள்ள சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தல்!

பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷப் பூஜையைக் காணலாம். இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம். மேல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைப்பேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.