பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம்: சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்களில் புதிய நடைமுறை

singapore-supermarkets plastic bags charge

சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாடிக்கையாளர்கள் விரைவில் பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

ஒவ்வொரு பைகளுக்கும் குறைந்தது 5 காசு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவங்களான NTUC FairPrice, Prime, கோல்டு ஸ்டோரேஜ், Giant, ஷெங் சியோங் கடைகளில் இது முதலில் நடப்புக்கு வரும்.

இந்த கட்டண நடைமுறை வரும் ஜூலை 3ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.

அது சில பிளாஸ்டிக் பைகளுக்கு பொருந்தாது. அதாவது இறைச்சி, காய்கறிகள் அல்லது கடல் சார்ந்த உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பைகளுக்கு பொருந்தாது.