சிங்கப்பூரின் பழம்பெரும் நாளிதழ் “தமிழ் முரசு” 85ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது..!

Singapore "Tamil Murasu" daily paper reached 85th year
Singapore "Tamil Murasu" daily paper reached 85th year

சிங்கப்பூர் மக்களின் பேராதரவுடன் இயங்கி வரும் தமிழ் நாளிதழான ‘தமிழ் முரசு’ 84 ஆண்டுகளை நிறைவு செய்து 85ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

சிங்கப்பூர் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்ற தமிழ் நாளிதழான தமிழ் முரசு 1935ஆம் ஆண்டு முதன் முதலில் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை மக்களுக்குத் தேவையான அனைத்துவித நிகழ்வுகளையும், முக்கிய தகவல்களையும் சரியான முறையில் வழங்கி வருகிறது.

தமிழ் பேசும் மக்களின் ஆதாரமாக விளங்கும் இந்த தமிழ்முரசு பல எண்ணற்ற தகவல்களின் களஞ்சியமாக இருந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் நாளிதழ் என்றால் நினைவுக்கு வருவது தமிழ் முரசு தான், அந்த அளவிற்கு தமிழ் முரசு தமிழ் மக்களோடு இணைந்து வளர்ச்சி பெற்றுள்ளது.

சிங்கப்பூர் பகுதியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், செய்திகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒருசேர தொகுத்து தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறது.

தமிழ் முரசு நாளிதழ் அனைத்து தகவல்களின் களஞ்சியமாக இருந்து வருகிறது. அதாவது தமிழக செய்தி, இந்திய செய்தி, உலக செய்தி, விளையாட்டு செய்தி, வாழ்க்கை முறை, சினிமா, மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான பயனுள்ள தகவல்கள் அனைத்தையும் தடையின்றி வழங்கும் ஒரே தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆகும்.

மேலும், சிங்கப்பூர் சுற்றுலா தலங்கள், சமையல் மற்றும் உடல்நலம் ஆகியவற்றிலும் முக்கிய பங்கு இந்த நாளிதழுக்கு உண்டு.

84 ஆண்டுகள் இந்த போற்றத்தக்க பணியில் திறம்பட செயலாற்றிய தமிழ் முரசு நாளிதழ் குழுவினருக்கு பல்வேறு மக்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

85ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ‘தமிழ் முரசு’ நாளிதழுக்கு “தமிழ் மைக்செட்” இணையதள குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.