சிங்கப்பூரில் இருந்து திருச்சி, மதுரை வந்த இருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இல்லை!

Singapore Trichy flight

சிங்கப்பூர் உட்பட குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாட்டிலும் தீவிர பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் விழிப்புடன் இருக்கின்றன.

வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி – முதற்கட்ட பரிசோதனையில் Omicron என தகவல்

இதில் சிங்கப்பூர் உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

அதை அடுத்து, அவர்களுக்கு ஓமைக்ரான் வகை பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதை கண்டறிய, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 56 வயது ஆடவர் மற்றும் மதுரை வந்த 43 வயது நபர் ஆகியோருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இவர்களுடன் சேர்த்து மேலும் 3 பேருக்கு அந்த புதிய வகை தொற்று இல்லை என்று முதற்கட்ட சோதனைகள் கூறுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இருப்பினும், அவர்களது மாதிரிகள் பெங்களூர் ‘இன்ஸ்டாம்’ பகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில் இறுதி முடிவு தெரிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்: கட்டுப்பாடு கூடுதல் தளர்வால் வெளியில் சென்று மகிழ்ந்தனர்!