சிங்கப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு… கோவில்களில் குவிந்த இந்து பக்தர்கள் – வெளிநாட்டு ஊழியர்கள் வழிபாடு

Tripadvisor

சிங்கப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு முதல் நாளான வியாழக்கிழமை (ஏப்ரல் 14) காலை சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் மற்றும் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் கோயிலில் இந்து பக்தர்கள் குவிந்தனர்.

குறிப்பாக முன்பை போல இல்லாமல், கோயில்களில் அவர்கள் குறைவான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். அதாவது கடந்த மாதம் மத நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

தமிழ்நாட்டின் வங்கியில் இருந்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியுமா?

கோவில்களில், பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்ய அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள் அகற்றப்பட்டன, மேலும் மக்கள் நுழைவதற்கு வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை என்ற சூழல் அனைவருக்கும் நிம்மதியை தந்தது.

இருந்தும் சில விதிகள் நடப்பில் இருந்தன. உதாரணமாக, ட்ரேஸ் டுகெதர் செயலியைப் பயன்படுத்தி பக்தர்கள் உள்ளே நுழைய வேண்டியிருந்தது மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் மட்டுமே கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

“முன்னர் காளி அம்மனுக்கு அதிக அபிஷேகங்கள் செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இப்போது அனைவரும் வந்து தரிசனம் செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என அங்கு வருகை தந்த 55 வயதான ஊழியர் ரமேஷ் வி.ஆர்.சோமன் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்களே சிங்கப்பூர் கிளம்ப ரெடியா இருங்க… கட்டுமானத் துறையில் எகிறும் தேவை – பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி!