“இந்தப் பாரம்பரிய அறுவடைத் திருவிழா தமிழ்நாட்டில் தோன்றியது”- பொங்கல் தின வாழ்த்துத் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை நிலையம் (Lisha), இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre) ஆகிய அமைப்புகளால் சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, குயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பரத நாட்டியம் ஆகியவை சிங்கப்பூரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து வந்த ஊழியரை ஆயுதம் கொண்டு கடுமையாக தாக்கிய இருவர்

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “பொங்கலோ பொங்கல்- பொங்கல் வாழ்த்துகள். பொங்கல் பண்டிகை நாளை (14/01/2023) தொடங்கி, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழர்கள் பலரால் கொண்டாடப்படும். இந்தப் பாரம்பரிய அறுவடைத் திருவிழா தமிழ்நாட்டில் தோன்றியது. அறுவடைச் செழிக்க உதவும் சூரிய பகவானுக்கும், விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சிங்கப்பூர் துணைத் தூதர் சந்திப்பு!

இந்த வார இறுதியில், இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre) பொங்கல் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சி, பொங்கல் பண்டிகைக்கு வேளாண்மை அடிப்படை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமையும். பொங்கல் பண்டிகை குறித்து நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் விரிவாக அறிந்துக் கொள்ள இந்திய மரபுடைமை நிலையத்தின் https://www.indianheritage.gov.sg/pongalo-pongal/index.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம். செழிப்பும், மங்களமும் அளவின்றிப் பொங்கி வலியட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துச் செய்தியுடன், இந்திய மரபுடைமை நிலையத்தில் நடப்பாண்டு பொங்கல் கொண்டாட்டத்தின் போது, இடம் பெற்ற தாரை தப்பட்டை நிகழ்ச்சியின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.