போதைப்பொருள் கடத்திய வழக்கில் தங்கராஜூவுக்கு தூக்கு…. ஏப்.26- ல் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு!

File Image

சிங்கப்பூரில் தங்கிப் பணிபுரிந்து வந்தவர் தங்கராஜு சுப்பையா (வயது 46). கடந்த 2013- ஆம் ஆண்டு 1,017.9 கிராம் போதைப்பொருளைக் கடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் மீது சிங்கப்பூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணையை நடத்தியது.

விதிகளை மீறிய ஊழியர்கள்… அதிரடி சோதனையில் பிடித்த அதிகாரிகள் – S$10000 வரை அபராதம் விதிக்கப்படலாம்!

அதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் மீது போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணமான நிலையில், கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்கராஜூ சுப்பையாவுக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், சிங்கப்பூர் சிறைத்துறை தங்கராஜு சுப்பையாவின் உறவினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்கராஜு சுப்பையாவின் மரணதண்டனை ஏப்ரல் 26- ஆம் தேதி சாங்கி சிறையில் நிறைவேற்றப்படும் என்று சிங்கப்பூர் சிறைத்துறை உறுதி செய்து, ஏப்ரல் 19- ஆம் தேதி புதன்கிழமை அன்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களின் பலே திட்டம்.. தப்பிச் செல்ல முயன்ற இருவரை விமானத்தில் வைத்து தூக்கிய போலீஸ்

ஆறு மாத இடைவெளிக்கு பிறகு சிங்கப்பூர் அதிகாரிகளால் நிறைவேற்றப்படும் முதல் மரணத் தண்டனை இதுவாகும். கடந்த 2022- ஆம் ஆண்டு மட்டும் சிறைத்துறை அதிகாரிகள் 11 மரணத் தண்டனைகளை நிறைவேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.