சிங்கப்பூரில் இருந்து சிவகங்கைக்கு வந்த 23 பேர் – கடும் வீட்டு கண்காணிப்பு

Madurai airport
(PHOTO: iamrenew)

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டின் சிவகங்கைக்கு சுமார் 23 பேர் ஒரே நாளில் வந்துள்ளனர், இவர்களை தமிழக சுகாதாரத்துறை நுனுக்கமாக கண்காணித்து வருகிறது.

ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 12 நாடுகளுக்கு கடுமையான சோதனை நடைமுறையை இந்தியா அறிவித்துள்ளது, அதில் சிங்கப்பூரும் அடங்கும்.

S Pass, ஒர்க் பெர்மிட் உடைய கட்டுமானம், கடல் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு VTL விண்ணப்ப அனுமதி இல்லை

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டின் சிவகங்கைக்கு வந்த பயணிகளை பரிசோதனைக்கு பின் வீட்டு தனிமையில் அரசாங்கம் வைத்துள்ளது.

சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங், சீனா, இஸ்ரேல், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, பிரேசில், வங்கதேசம், மொரீசியஸ் உட்பட 12 நாடுகள் அந்த பட்டியலில் அடங்கும்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிகமானோர் வருகின்றனர், இவர்களுக்கு PCR பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படுகிறது, மேலும் இவர்கள் வீட்டு தனிமையில் இருக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதே போல், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோரை மக்கள் கூடும் பொது இடங்களில் ஒன்றாக நடமாட விடாமல் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Omicron மாறுபாடு பற்றிய கவலை: மலேசியா-சிங்கப்பூர் இடையே VTL திட்டம் தொடருமா?