சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் மீது மனைவி கொடுத்த புகார் – கைது செய்த போலீஸ்!

Singapore tamilnadu worker wife complaint

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் ஒருவர் மீது கொலை மிரட்டல் தொடர்பாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை அவரை கைது செய்தது.

தமிழகத்தின் காரைக்குடி, பாப்பா ஊரணி பகுதியை சேர்ந்த 33 வயதான கண்ணன் என்ற ஊழியர் தற்போது கைது செய்யப்பட்டார்.

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயல்: ரகசிய கோட் வேர்ட்…ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இவர் 2019ஆம் ஆண்டு மவுனிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதிலிருந்து சிங்கப்பூரில் வேலைக்கு போக வேண்டும் என்று மவுனிகாவிடம் பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, திருமணம் ஆன 2 மாதத்தில் அவர் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். அன்றிலிருந்து பிரச்சனை ஆரம்பம் ஆனது.

சிங்கப்பூரில் இருந்து கொண்டு மனைவிடம் பேசாமல் வேறு பெண்ணுடன் போன் மூலமாக பேசி வந்துள்ளார் அவர்.

அதன் பின்னர், மனைவிக்கு தகவல் தெரிவிக்காமல் சொந்த ஊர் வந்துள்ளார் கண்ணன், அதோடு மட்டுமல்லாமல் போனில் பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் வீட்டில் தங்கியுள்ளார்.

இதுப்பற்றி மனைவி மவுனிகா கேட்டபோது, அவரை அடித்து, துன்புறுத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் கண்ணன்.

இறுதியில் இதுபற்றி மகளிர் போலீசாரிடம் மவுனிகா புகார் செய்தார், பின்னர் கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களின் Work pass அனுமதிக்கு தேவைகளுக்கு இது கட்டாயம் – தங்கும் விடுதி, கட்டுமான ஊழியர்களுக்கு Mandatory!