“தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த சிங்கப்பூரர்களில் 1,270 பேர் பணி நீக்கம்”- நாடாளுமன்றத்தில் மனிதவள அமைச்சர் தகவல்!

File Photo: Minister Tan See Leng

சிங்கப்பூர் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்டத் துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் விரிவான பதிலை அளித்து வருகின்றனர்.

இனி விமானங்களில் இப்படி நடந்தால் இதுதான் தண்டனை! – விமானத்தில் போதையில் இருக்க தடையா!

அந்த வகையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், எத்தனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.

இதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்துப் பேசிய மனிதவளத்துறை அமைச்சர் டான் சீ லெங் (Ministry Of Manpower Tan See Leng), “தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் பாதி வரை தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த உள்ளூர் ஊழியர்களான சிங்கப்பூரர்களில் சுமார் 1,270 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுப்பன்றி மீது மோதியதில் காயமடைந்த 64 வயது ஆடவர்! – பின்னால் வந்த வாகன ஓட்டி உதவ முயற்சி

அவர்களில் 10- ல் 8 பேர் தொழில்நுட்பம் அல்லாத விற்பனை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரிந்து வந்தவர்கள். சுமார் 10 பேரில் 7 பேர் 35 மற்றும் அதற்கும் குறைவான வயதுடையவர்கள். இந்த ஆண்டு சிங்கப்பூரில் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ட்விட்டர், பேஸ்புக், மெட்டா, ஷாப்பீ ஆகியவை அடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.