16 வயது சிறுமியை காணவில்லை – தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு போலீஸ் வேண்டுகோள்

teenage girl missing
(Photo: SPF)

சிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி 26 முதல் 16 வயது சிறுமியை காணவில்லை. இது குறித்த தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு சிங்கப்பூர் காவல் படை (SPF) கேட்டுக்கொண்டுள்ளது.

ஜோலின் ஹோ மே யிங் (Jolin Ho May Ying) என்ற அந்த பெண் கடைசியாக புக்கிட் பஞ்சாங்கில் உள்ள சென்ஜா சாலையில் உள்ள பிளாக் 633A-வில் அன்று இரவு 8.30 மணியளவில் கடைசியாக காணப்பட்டார் என்று இன்று (மார்ச் 9) செய்தி வெளியீட்டில் SPF தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 5 பெரிய தங்கும் விடுதிகளில் வசிக்கும் 10,000 பேருக்கு முதலில் தடுப்பூசி!

அவர் காணாமல் போகும் முன்பு, நீல நிற டாப் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் அல்லது தகவல்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும் SPF கேட்டுக்கொண்டுள்ளது.

நீங்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று SPF தெரிவித்துள்ளது.

தன் கஷ்டங்களை தள்ளிவைத்து, பிறருக்கு ஓடி சென்று உதவுவதில் சிறந்தவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள்…!