சிங்கப்பூரில் இலவச Oximeter பெறும் துண்டுப் பிரசுரத்தை தொலைத்த குடியிருப்பாளர்கள்; கைவிரித்த Temasek நிறுவனம்.!

Singapore Temasek Free oximeter
Pic: Temasek Foundation/Karen Lui.

சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், Oximeter ரத்தத்தின் உயிர்வாயு அளவை பரிசோதிக்கும் கருவி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக Temasek நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

ஜூலை மாதம் 3ம் தேதிக்குள், வீட்டிற்கு ஒரு Stay Prepared தாள் அனுப்பப்படும் என்றும், பின்னர் அதனை காட்டி, ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகள் மற்றும் மருந்தகங்களில் oximeter கருவியை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அந்நிறுவனம் கூறியிருந்தது.

Oximeter கருவியை பெறுவதற்கான துண்டுப் பிரசுரங்கள் அஞ்சல் மூலம் ஜூன் 28 முதல் ஜூலை 3 வரை குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக காணொளி வெளியிட்ட ஆடவர் – போலீஸ் விசாரணை

ஆனால், சிலர் அந்த துண்டுப்பிரசுரத்தை தவறுதலாக வீசிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆகையால், தங்களுக்கு வேறு துண்டுப்பிரசுரம் அனுப்பும்படி சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்குக் கிடைத்த துண்டுப்பிரசுரத்தைத் தவறுதலாக தூக்கிபோட்டுவிட்டதாக கூறும் குடியிருப்பாளர்கள், அந்தப் பிரசுரங்கள் இருந்தால்தான் oximeter கருவியை பெறமுடியும் என்பது தங்களுக்கு தெரியாமல் போய்விட்டதாக கூறியுள்ளனர்.

Temasek நிறுவனத்தின் இணையப் பக்கத்திலும், முகநூலிலும் கருத்து தெரிவித்துள்ள சிலர், அந்தக் கருவியைப் பெறுவதற்கு வேறு ஏதாவது வழி உண்டா என கேட்டனர்.

இந்த துண்டுப்பிரசுரத்தை உங்களுடைய உயிர்வாயுமானியுடன் தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அந்தப் பிரசுரத்தில் சிவப்பு நிறக் கட்டத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

உயிர்வாயுமானியை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்போது அதைப் பெறலாம் என்பதை தெரிவிக்கும் விவரங்களும் அதில் உள்ள பார்கோடும் அதில் இருந்தது.

இந்நிலையில், முகநூல் பயனாளிகளுக்குப் பதில் கூறிய Temasek நிறுவனம், வேறு ஒரு துண்டுப் பிரசுரத்தைக் தங்களால் கொடுக்க இயலாது என தெரிவித்துள்ளது.

புக்கிட் மேரா வியூ சந்தையில் வியாபாரம் தொடர்ந்து மந்தம்..கடைக்காரர்களுக்கு உதவிகள் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்.!