சிங்கப்பூரா? தாய்லாந்தா? – கடும்போட்டி நிலவுகிறதா! ஏன் தெரியுமா?

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 480 குடியிருப்பாளர்கள் - சான்றிதழ்கள் வழங்கல்

சிங்கப்பூர் நாணயத்துக்கும் தாய்லாந்து நாணயத்துக்கும் இடையே கடும்போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.தென்கிழக்காசியாவில் இந்தாண்டிற்கான சிறந்த நாணயம் என்ற தகுதியைப் பெறுவதற்கு தாய்லாந்தின் நாணயமான ‘பாட்’ டிற்கும் சிங்கப்பூர் வெள்ளிக்கும் இடையே போட்டி ஏற்படும் எனத் தெரிகிறது.

கடந்த மாதம் சீனா அதன் COVID-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதால் அங்கிருந்து தாய்லாந்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தாய்லாந்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் அதிகளவில் சீனாவிற்கு ஏற்றுமதியாகிறது.எனவே,சீனாவின் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளால் அதிகம் பலனடையும் நாடாகத் தாய்லாந்துத் திகழும் எனக் கருதப்படுகிறது.

வட்டிவிகிதம் உயர்த்தப்படும் என்று ‘BANK OF THAILAND’ முன்பு அறிவித்திருந்தது.கடந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் வளர்ச்சி கண்ட ஒரே ஆசிய நாணயம் சிங்கப்பூர் வெள்ளி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.