சிங்கப்பூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் தைப்பூசம்: கனமழையிலும் வெகு விமர்சையாக நடந்த திருவிழா!

singapore-thaipusam-2023/
Facebook by SambavLogz Sampath and Shimojo Takahiro

சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா மழை, வெயில் பாராமல் வெகு விமர்சையாக நடந்தது.

இதில் பக்தர்கள் மகிழ்ச்சியுடம் பங்கேற்று தங்கள் நேத்திக்கடன்களை பக்தியுடன் நிறைவேற்றினர்.

ஆண்டுதோறும் தைப்பூசம் கொண்டாடப்படும் அதே வேளையில், கோவிட்-19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பாத யாத்திரை நடைபெறாமல் இருந்தது.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, காவடிகள் மற்றும் பால் குடம் பாத யாத்திரையாக எடுத்துச் செல்லப்படுவது மூன்று ஆண்டுகளில் இதுவே முதல் முறை.

பாத யாத்திரையின் ஒரு பகுதியாக, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் வரை சுமார் 3.2 கிலோமீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வெறுங்காலுடன் நடந்து செல்வர்.

சிங்கப்பூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூசத்தின் போது பக்தர்கள் செல்லும் பாத ஊர்வலத்திற்கான பாரம்பரிய பாதை இதுதான்.

பாத யாத்திரை நேற்று பிப்.5, நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.