“வீரத்தை குறிக்கும் முருகனை போற்றும் தைப்பூச தினம்” – பிரதமர் லீ வாழ்த்து

Singapore Thaipusam PM Lee Wishes
(Photo: PM Lee/FB-MCI Photo by Betty Chua)

சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா இன்று கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பன்முககலாச்சாரம் என்பது சிங்கப்பூரின் அடிப்படை பண்பு என்று கூறிய பிரதமர் லீ, பல இன, சமய மத நல்லிணக்கம் என்பது விலைமதிப்பில்லாத ஒன்று என குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் 2 பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்த திட்டம் – உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஆடவர் தடுத்து வைப்பு

நாம் இந்த பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலம், பரஸ்பர அன்பு மற்றும் புரிதலை அதிகப்படுத்தலாம் என்றும் கூறினார்.

“இன்று தைப்பூச புனித திருவிழா, இது வீரம் மற்றும் இளமையை குறிக்கும் கடவுள் முருக பகவான் என்று அழைக்கப்படும் தண்டாயுதபாணியை கொண்டாடும் தினம்.”

“மற்ற நேரங்களில், பக்தர்கள் நன்றி செலுத்தும் வகையில் ஊர்வலத்தில் பால் குடம் மற்றும் வண்ண காவடிகளை எடுத்துச் செல்வார்கள்.”

இந்த ஆண்டு தொற்றுநோய் காரணமாக, பாத ஊர்வலம் இருக்காது, ஆனால் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலில் பால் குடம் எடுத்து காணிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று திரு லீ கூறினார்.

“இந்த தைப்பூச நாளில் அனைத்து பக்தர்களும் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க விரும்புகிறேன்.”

இது கட்டுப்பாடுகளைக் கொண்ட அமைதியான திருவிழாவாக இருக்கலாம், ஆனால் உங்களுக்கு ஏற்ற வழிகளில் பக்தியை காட்ட முடியும் என்று நம்புகிறேன் என்றும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் 3 பேருக்கு புதியவகை B117 தொற்று – Work permit வைத்திருப்பவர் ஒருவர் பாதிப்பு