சிங்கப்பூரில் இருந்து மெல்போர்ன் வந்த பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Photo: Melbourne Airport Official Facebook Page

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Vaccinated Travel Lane- ‘VTL’) சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்க சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்திருந்தது. அதேபோல், ஆஸ்திரேலியா- சிங்கப்பூர் இடையேயான விமான சேவையை நவம்பர் 21- ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளிக்கப்படுவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்தார்.

ஷா சென்டரில் தீ: சுமார் 200 பேர் வெளியேற்றம் – சில உணவகங்கள் மூடல்

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 200 பயணிகளுடன் நேற்று (21/11/2021) அதிகாலை 01.15 AM மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி) ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம். அதைத் தொடர்ந்து, நேற்று (21/11/2021) காலை 08.08 AM மணிக்கு மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு சிங்கப்பூர் பயணிகளுக்கு விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் மெல்போர்ன் விமான நிலையத்தில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், விமான நிலையத்தில் வரவேற்க வந்த தங்களது குடும்பத்தினரைப் பார்த்து பயணிகள் உணர்ச்சிப் பொங்க ஆனந்த கண்ணீர் விட்டனர். இந்த சிறப்பு பயணத் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சிங்கப்பூர் குடிமக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய இடங்களுக்கு முதன் முறையாக எந்தவித தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளின்றிப் பயணிக்க, சிங்கப்பூர் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் 1,670 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

எனினும், பயணிகள் விமான நிலையத்தில் கொரோனா பிசிஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் சுமார் 50,000- க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள் வசித்து வருகின்றனர். அதேபோல், சுமார் 25,000- க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியா நாட்டு குடிமக்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா இடையேயான விமான சேவை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சிங்கப்பூர் மாணவர்கள், ஆஸ்திரேலியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயின்று வரும் நிலையில், விமான சேவை தொடங்கப்பட்டது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

சிங்கப்பூர்- திருச்சி இடையே சிறப்பு விமானத்தை இயக்கிய ‘ஏர் ஏசியா’!

இரு நாடுகளிடையே அதிகமான விமானங்களை இயக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.