சிங்கப்பூரில் இருந்து பாத்தாமுக்கு சென்று கொண்டிருந்த படகில் திடீர் தீ விபத்து!

Photo: Sindo Ferry Official Facebook Page

 

மே 05- ஆம் தேதி அன்று காலை சிங்கப்பூரின் பதிவெண்ணை கொண்ட குயின் ஸ்டார் 2 (QUEEN STAR 2) என்ற படகு 62 பயணிகள் மற்றும் படகு நிறுவனத்தின் 6 ஊழியர்கள் என மொத்தம் 68 பேருடன் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியா நாட்டின் பாத்தாமுக்கு சென்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், கூசுத் தீவுக்கு (Kusu Island) அருகே படகு சென்றுக் கொண்டிருந்த போது மதியம் 12.30 மணியளவில், படகின் இயந்திர அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 61 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

தீ விபத்து குறித்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (Maritime and Port Authority of Singapore) மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (Singapore Civil Defence Force- ‘SCDF’), கடலோரக் காவல்படை (Police Coast Guard- ‘PCG’) உள்ளிட்டவை துறைகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விரைந்து வந்தனர். எனினும், அவர்கள் வருவதற்கு முன்பாக படகு நிறுவனத்தின் ஊழியர்கள் தீயை முழுவதுமாக அனைத்து, பெரும் சேதத்தைத் தவிர்த்துள்ளனர்.

தலைகுப்புற கவிழ்ந்து கடும் விபத்துக்குள்ளான லாரி – இருவர் மருத்துவமனையில் அனுமதி

பின்னர், படகு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்ததை அடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பாத்தாம் (Batam) தீவுக்கு சென்றடைந்தனர். தீ விபத்தில் யாருக்கும், எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று படகு நிறுவனம் தெரிவித்துள்ளது.