சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணிகள்…அதிரடியாக காட்டிய அதிகாரிகள்….3.32 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Photo: Chennai Customs

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை அதிகளவுக் கடத்திக் கொண்டு வரும் நிகழ்வு அதிகளவில் நடைபெறுகிறது. இதனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சென்னை மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் (Chennai Customs Officers) மற்றும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், விமான நிலையத்தில் போதைப் பொருள், தங்கக் கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயந்திரம் வழி பணத்தை டெபாசிட் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – விரக்தி அடைந்த வாடிக்கையாளர்

அந்த வகையில், மார்ச் 8- ஆம் தேதி அன்று ஏர் இந்தியா (AI-347) மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் (6E-52) விமானங்களில் சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இரு பயணிகளைப் பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எனினும், அந்த இரண்டு பயணிகளும் முன்னுமுரணாக வகையில் பேசியதால், அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். அத்துடன், அவர்களின் உடைமைகள் முழுவதையும் சோதனை செய்ததில், சுமார் ரூபாய் 3.32 கோடி மதிப்பிலான 6.8 கிலோ தங்கம் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

S$1,000 நினைவு பண நோட்டை பெற ஓர் அரிய வாய்ப்பு – இப்போதே முந்துங்கள்

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் கடத்திக் கொண்டு வரப்பட்ட தங்கம் முழுவதையும், வருமான வரித்துறைச் சட்டம் 1962-ன் (CA,1962) கீழ் பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த இரண்டு பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.