சிங்கப்பூரிலிருந்து படகுச் சேவையா! – புதிய படகுச் சேவை எந்த படகு முனையம் வரை தெரியுமா?

singapore to desaru coast boat service Batamfast firm

சிங்கப்பூரின் தானா மேரா படகுத் துறைக்கும் மலேசியாவின் ஜோஹோர் மாநிலத்தில் உள்ள டேசாரு கோஸ்ட் படகுத் துறைக்கும் இடையே படகுச் சேவையைத் தொடங்குவதற்காக கோரிக்கை முன்மொழியப் பட்டிருந்தது.தற்போது அந்த நேரடி படகுச் சேவை செயல்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

‘Batam Fast’ நிறுவனம் மார்ச் 23-ஆம் தேதி படகு சேவைக்கான விண்ணப்பத்தை சமர்பித்திருந்தது.சிங்கப்பூர் கடல் துறை மற்றும் துறைமுக ஆணையம் இதனை நேற்று தெரிவித்தது.புதிய படகு பயணப் பாதையின் பாதுகாப்பை மதிப்பீடு செய்தல் மற்றும் பயணச் சேவை வழங்குவதற்கு படகுகள் தகுதி பெற்றுள்ளதை அதிகாரிகள் சான்றளித்தல் போன்றவற்றை பூர்த்தி செய்யுமாறு Batamfast நிறுவனத்திடம் ஆணையம் கேட்டுக் கொண்டது.

தேவையான விவரங்களை Batamfast சமர்ப்பித்தவுடன் ,முன்மொழியப்பட்ட படகுச் சேவைக்கான பாதுகாப்பு விதிமுறைகளை நிறுவனம் நிறைவு செய்ததா என்பதை ஆணையம் மதிப்பீடு செய்த பின்னரே ஒப்புதல் வழங்கப்பட்டது.

படகுச் சேவைக்கான Batamfast நிறுவனத்தின் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக சிங்கப்பூர் துறைமுக ஆணையம் ,மலேசிய மற்றும் ஜோஹோர் கடல்துறை ஆணையம் ஆகியவற்றிடம் நேற்று தெரிவித்தது.

மற்ற ஆணையங்களிடம் இருந்து ஒப்புதலை பெற்ற பின்னர் சேவையைத் தொடங்குவதற்கான Batamfast நிறுவனத்தின் இறுதிகட்ட தயாரிப்பு பணிகளைப் பொறுத்து படகுச் சேவை தொடங்கப் படும்.