சிங்கப்பூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த 24 பேர் தனிமை – தீவீர கண்காணிப்பு

Photo: GoogleMaps

சிங்கப்பூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த 24 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவீர கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் திரு. குமரகுருபரன் தெரிவித்தார்.

மேலும், அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்றுக்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் இரண்டு வாரங்களாக 14 வயது சிறுமியை காணவில்லை – தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள்

சிங்கப்பூர் உட்பட குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாட்டிலும் தீவிர பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டு, அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் விழிப்புடன் இருக்கின்றன.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி, மதுரை வரும் பயணிகள் தீவீர சோதனைக்கு பின்னரே கட்டுப்பாடுகளுடன் வீட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

சோதனையின்போது சில பயணிகளுக்கு கொரோனா கிருமித்தொற்றும் கண்டறியப்பட்டது. மேலும், அவர்களுக்கு ஓமைக்ரான் வகை பாதிப்பு ஏதும் உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.

தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டாலும், சிங்கப்பூர் உட்பட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் முகவரியை அதிகாரிகள் வாங்கிக்கொள்கின்றனர்.

அந்தந்த பகுதிகளில் கண்காணிக்க சுகாதாரப் பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தியும் உள்ளனர்.

தனிமையில் உள்ள பயணிகள், வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும், உடல்நிலையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“உழைப்பு நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை” – இதைக்கேட்டு நிறுவனத்தின் 20 கோப்புகளை நீக்கிய ஊழியருக்கு அபராதம்!