சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

ஓமிக்ரான் (Omicron) கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அதன் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோர் கூடுதல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து சிட்னி சென்ற இரண்டு பயணிகளுக்கு புதிய Omicron COVID-19 வகை உறுதி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தற்போது புதிதாக அதிக வீரியம் கொண்டதாக உருமாறியுள்ளது. அதற்கு ஓமிக்ரான் (Omicron) என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. இவ்வகை வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவோர் கூடுதல் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ள பொது சுகாதாரத்துறை, அந்த 12 நாடுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து வருவோர்களைக் கூடுதலாகக் கண்காணிப்பதற்காக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் தலா ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு கடுமையாகும் சோதனை – டிசம்பர் 3 முதல் புதிய நடைமுறை

பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. பட்டியலில் உள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட ‘RTPCR’ நெகட்டிவ் சான்றிதழுடன் விமானத்தில் வந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் விமான நிலையத்திற்கு வந்ததும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லையெனில் ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பப்படுவர். எட்டாம் நாள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் வந்தால் தனிமைப்படுத்துதல் இல்லை.

விமான நிலையத்தில் தொற்று என்று கண்டறியப்பட்டால், உடனடியாக மாதிரி எடுக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும். தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும். ‘Omicron’ இல்லையென பரிசோதனையில் கண்டறியப்பட்டால், வீட்டிற்கு அனுப்பப்படுவர். ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு, தொற்று நெகட்டிவ் வந்த பின்பே டிஸ்சார்ஜ் செய்யப்படுவர். பட்டியலில் உள்ள நாடுகளைத் தவிர, பிற நாடுகளில் இருந்து வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசிய பிரதமரை சிங்கப்பூருக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி”- பிரதமர் லீ சியன் லூங்!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் ‘ஓமிக்ரான்’ நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.