சிங்கப்பூர், திருப்பதி இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: IndiGO Official Twitter Page

இந்தியாவின் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines).

சாங்கி ஏர்போர்ட் முனையம் 3 அருகே நான்கு வாகனங்கள் விபத்து

குறிப்பாக, திருப்பதி, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, சிங்கப்பூரில் இருந்து சென்னை, ஹைதராபாத் வழியாக திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து சென்னை, ஹைதராபாத் வழியாக சிங்கப்பூருக்கும் தினசரி விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த வழித்தடத்தில் தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட விமான சேவைகளை விமான நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

“65 வயது சீன பெண்ணை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

விமான சேவை, விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.