‘சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக திருப்பதிக்கு விமான சேவை’- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

Photo: IndiGO Official Twitter Page

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக திருப்பதிக்கு வரும் மார்ச் 27- ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும். சிங்கப்பூரில் இருந்து திருச்சி வழியாக திருப்பதிக்கு விமானங்கள் இயக்கப்படும். அதேபோல், திருப்பதிலிருந்து திருச்சிக்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்படும். இது Non- VTL விமான சேவை ஆகும்.

“சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு ‘VTL’ விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு விமான சேவை வழங்கப்படும். பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு சிங்கப்பூர் மற்றும் திருப்பதியில் உள்ள இண்டிகோ நிறுவனத்தின் அலுவலகங்களை தொடர்புக் கொள்ளலாம். அதேபோல், https://www.goindigo.in/ என்ற இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்றும் பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டவைக் குறித்து அறிந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்!

அதேபோல், சிங்கப்பூரில் இருந்து சென்னை, பெங்களூரு வழியாக திருப்பதிக்கு தினசரி ‘VTL’ விமான சேவையை இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.