சிங்கப்பூர், திருப்பதி இடையே இண்டிகோவின் ‘VTL’ விமான சேவை!

Photo: IndiGO Official Twitter Page

சிங்கப்பூரில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து சிங்கப்பூருக்கும் தினசரி VTL விமான சேவையை வழங்கி வருகிறது இண்டிகோ நிறுவனம். குறிப்பாக, இவ்வழித்தடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் (IndiGO) இயக்கி வருகிறது.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

சிங்கப்பூரில் இருந்து புறப்படும் இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், சென்னை வழியாக ஹைதராபாத்துக்கு சென்று, பின்னர் அங்கிருந்து திருப்பதி செல்லும். அதேபோல், சிங்கப்பூரில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம், சென்னை வழியாக பெங்களூரு சென்று பின்னர் அங்கிருந்து திருப்பதி செல்லும். இவை அனைத்தும் VTL விமான சேவை ஆகும். இதில், சென்னை வழியாக நாள்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பயணிகளை ஈர்க்க சிங்கப்பூர் திட்டம்: “தமிழ்நாடு தான் டார்கெட்” – மாஸ் காட்டும் தலைநகர் சென்னை!

VTL விமான சேவை என்பதால், சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை. எனினும், சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பயணிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.