சிங்கப்பூர்-திருச்சி வந்த ஊழியர்கள்… RT-PCR இருந்தும் பிடிபட்டனர் – “இண்டிகோ, ஸ்கூட்” விமானங்களுக்கு கடும் எச்சரிக்கை

Singapore to trichy flight passengers covid update

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இருவரிடம் முறையான RT-PCR சோதனை சான்றிதழ் இல்லாததை அடுத்து விமான நிலையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூர்-திருச்சி வழித்தடத்தில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு அந்த கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் கணவர்… உயிர்வாழ போராடும் பிள்ளை, “ஒரு ஊசி ரூ.18 கோடி” – உதவிக்கு ஆளில்லாமல் கலங்கி நிற்கும் குடும்பம்

திருச்சி வந்த இரு பயணிகள் முறையான RT-PCR சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றும், இதனை அடுத்து இந்த எச்சரிக்கை எழுந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதில் ஒருவர் பழைய சான்றிதலுடனும், மற்றொருவர் பல குளறுபடிகளுடன் கூடிய சான்றிதழையும் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், தொற்று கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்தனர்.

அதோடு சேர்த்து திருச்சி-சிங்கப்பூர் வழித்தடத்தில் சேவை வழங்கும் இண்டிகோ, ஸ்கூட், ஏர் இந்தியா ஆகியவைக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.