இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு அதிகரித்த வேலைவாய்ப்பு..!

(Photo: TODAY)

சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் மொத்த வேலைவாய்ப்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

அப்போது அதிக சிங்கப்பூரர்கள் மற்றும் வெளிநாட்டினர் பணியமர்த்தப்பட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (ஜன 28) தெரிவித்துள்ளது.

கல்லாங் MRT அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்…போதைப்பொருள் அருந்தி தற்கொலை

கடைசி காலாண்டில் மொத்த வேலைவாய்ப்பு 47,400ஆக உயர்ந்துள்ளது, அது அதற்கு முந்தைய மூன்றாம் காலாண்டில் 2,400ஆக இருந்தது.

சிங்கப்பூரர்களின் வேலை வாய்ப்பு அதிவேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.

அதே வேளையில், இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

ஒட்டுமொத்த COVID-19 கட்டுப்பாடுகளில் தளர்வு மற்றும் சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கும்போது, 2022ஆம் ஆண்டில் தொழிலாளர் சந்தை தொடர்ந்து மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக MOM தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் காலை இழந்த தமிழக ஊழியருக்கு நீங்க நேரடியா உதவி செய்யலாம் – முழு விவரம்