சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$5.8 மில்லியன் ஹிமாலய பரிசை தட்டி சென்ற ஒரே ஒருவர்!

Singapore Toto

சிங்கப்பூர் டோட்டோ டிரா பம்பர் பரிசு S$5 மில்லியன் தொகையை அதிஷ்டசாலி நபர் ஒருவர் தட்டி சென்றார்.

நேற்று திங்கட்கிழமை (மார்ச் 13) வெளியான குலுக்கல் முடிவுகளுக்குப் பிறகு, வெற்றியாளர் குறித்த அறிவிப்புகள் வெளியானது.

அந்த அதிர்ஷ்டசாலி நபர் சுமார் S$5.8 மில்லியன் மதிப்பிலான குரூப் 1 பரிசை அசால்ட்டாக தட்டி சென்றுள்ளார்.

அவர் அதற்கான குலுக்கல் சுய-தேர்வு டிக்கெட்டை சிங்கப்பூர் பூல்ஸின் Teck Whye கிளையில் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றிரவு நடந்த குலுக்கல் முடிவுகளில் வெற்றி பெற்ற மற்ற எண்கள்: 1, 3, 15, 18, 23, 48 மற்றும் கூடுதல் எண் 41.

குரூப் 2 வெற்றி தொகை S$85,478 பரிசை ஏழு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் டிக்கெட்டுகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த S$1 மில்லியன் மதிப்பிலான டோட்டோ டிரா ஜாக்பாட் தொகை குலுக்கல் அடுத்த வியாழன் அன்று நடைபெறும்.